பிக்பாஸ் ஷெரினுக்கு கல்யாணம் ஆகிடுச்சா? யார் அது தெரியுமா?
துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் ஷெரின் நடிகையாக அறிமுகமானாலும் அனைவருக்கும் மீண்டும் பரிட்சயமானது பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாகத்தான்.
கன்னட மொடல் டூ நடிகை
16 வயதில் மொடலான ஷெரின் துருவா எனும் கன்னட படத்தில் அறிமுகமானார்.
அதே ஆண்டு தமிழில் துள்ளுவதோ இளமை படத்தில் அறிமுகமானார், இந்த படத்தின் மூலம் இளசுகளின் மனதில் இடம்பிடித்தார் ஷெரின்.
தொடர்ந்து பல மொழிப்படங்களில் நடித்தாலும் திடீரென நடிப்புக்கு முழுக்கு போட்டார்.
எங்க ஆளையே காணோம் என ரசிகர்கள் தேடிக்கொண்டிருந்த வேளை, பிக்பாஸ் சீசன் 3ல் என்ட்ரி கொடுத்தார்.
ஹிட்டடித்த பிக்பாஸ்
தொடக்கத்தில் படு குண்டாக இருந்த ஷெரினை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியாகினர், அந்தளவுக்கு ஆளையே அடையாளம் தெரியாமல் மாறியிருந்தார்.
நிகழ்ச்சி செல்ல செல்ல பலரின் செல்லப்பிள்ளையானார், இவரது எடையும் கடகடவென குறைந்தது, ஆரம்பத்தில் இருந்த ஷெரினா இது என பலரும் ஷாக்காகினர்.
தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஷெரின், பல புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டுக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் இன்ஸ்டாவில் உரையாடிய ஷெரினிடம் ரசிகர்கள் பல கேள்விகளை கேட்டனர்.
அதில் ஒருவர் எப்போ கல்யாணம்? என கேட்க, இப்போதைக்கு உணவை திருமணம் செய்து கொண்டுள்ளேன் என ஜாலியாக பதிலளித்துள்ளார்.