அகோரி கலையரசனுக்கு அள்ளிக்கொடுத்த பிக் பாஸ் - சம்பளம் இவ்வளவு கொடுக்க காரணம் என்ன?
பிக் பாஸில் தொடர்ந்து மூன்று வாரங்கள் இருந்த கலையரசனுக்கு பிக் பாஸால் பெருந்தொகை சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது.
பிக் பாஸ்
தமிழ் உள்பட பல்வேறு மொழிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்படும் நிலையில், அதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. தமிழ் பிக்பாஸ் சீசன் 9 அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கியது.
எப்போதும் போல இந்த சீசனிலும் பல துறைகளில் பிரபலமாக இருக்கும் நபர்கள் களமிறங்கி இருக்கின்றனர். சமூக வலைத்தளங்களில் பிரபலமாக வலம்வந்த வாட்டர் மெலன் ஸ்டார் எனப்படும் திவாகர்,குக் வித் கோமாளி புகழ் கனி தொடங்கி இன்ஸ்டா பிரபலமான அரோரா,

சீரியல் நடிகர்கள் சபரி மற்றும் கம்ருதீன், இயக்குனர் பிரவீன் காந்த், இன்ஸ்டா பிரபலங்களான கானா வினோத், அகோரி கலையரசன், ரம்யா ஜோ மற்றும் சுபிக்ஷா, ஆர்ஜே கெமி மற்றும் நந்தினி, ஸ்டாண்ட் அப் காமெடியன் விக்கல்ஸ் விக்ரம், திருநங்கை அப்சரா, சீரியல் நடிகை ஆதிரை, மாடல் அழகியான வியானா உள்பட 20 பேர் போட்டியாளர்களாக களமிறங்கி உள்ளனர்.
இதில் ஆதிரை மற்றும் அப்சரா என இரண்டு போட்டியாளர்கள் பேிக் பாஸ் வீட்டில் இருந்து ஏற்கனவே கடந்த வாரங்களில் வெளியேற்றபட்டனர்.

இதில் அகோரி கலையசன் கடந்த வாரத்துடன் பிக் பாஸில் இருந்து வெளியேற்றப்பட்டார். அவருடைய சம்பள தகவல் வெளியாகி இருக்கிறது.
அதாவது, கலையரசன் ஒரு எபிசோடிற்கு ரூ.2 லட்சம் வரை சம்பளமாக பெற்றதாக கூறப்படுகிறது.அப்படி பார்த்தால் கலையரசன் பிக்பாஸ் வீட்டிற்குள் 28 நாட்கள் இருந்திருக்கிறார். அப்படி பார்க்ககையில் சுமார் 56 லட்சங்கள் இவருக்கு சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது.
அதாவது டிக் டாக் மூலம் பிரபலமான கலையரசன் தற்போது பிக் பாஸ் வீட்டில் லட்சங்களில் சம்பளம் அள்ளி சென்றது இணையவாசிகள் மற்றும் பொதுமக்களிடம் வைரலாகி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |