இந்த முறை பிக்பாஸ் வீடு இப்படிதான் இருக்குமாம்! வெளியே கசிந்த புகைப்படம்... மிரண்டுபோன ரசிகர்கள்
பிக்பாஸ் சீசன் 4 கடந்த 4 வருடமாக தமிழ்நாட்டிலும் நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இதுவரை 4 சீசன்கள் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி உள்ளது.
பிக்பாஸ் சீசன் 5 எப்போது தொடங்கும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், 5வது சீசன் இன்று தொடங்கும் 5வது சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். இந்நிலையில், இந்த சீஸனின் புரோமோ ஏற்கனவே பல்வேறு புரோமோ வெளியாகி ஏற்கனவே எதிர்பார்ப்பை எகிற வைத்து இருக்கிறது.
இன்று சீசனில் கலந்து கொள்ள போகும் போட்டியாளர்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளனர். இதனால் அறிமுக நிகழ்ச்சி அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே, பிக்பாஸ் சீசன் 5 தொடருக்கான போட்டோஸ் வெளியாகி இருக்கிறது.
இந்த சீசனுக்கான வீடு எப்படி இருக்கும் என்ற போட்டோஸ் வெளியாகி உள்ளது. மிகவும் பிரம்மாண்டமாக, புதிய தோற்றத்தோடு இந்த பிக்பாஸ் செட் இந்த முறை கட்டப்பட்டு உள்ளது. ஒவ்வொரு முறையும் இந்த வீடு ஒரு தீமை மையமாக வைத்து வடிவமைக்கப்படும்.
ஆனால், இந்த முறை முழுக்க முழுக்க பசுமையை மையமாக வைத்து பச்சை நிறத்தில் வெளிப்பகுதியான கார்டன் ஏரியா வடிவமைக்கப்பட்டுள்ளது. உட்பக்கம் எகிப்தில் இருக்கும் கட்டுமானம் போல கலைநயத்தோடு வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும், நீல நிறத்தில் சுவர்கள் கொண்ட ஷோபா இருக்கை பகுதி அமைக்கப்பட்டுள்ளது. சுவற்றில் அழகான கலை நயத்தோடு சிற்பங்கள், ஓவியங்கள் அமைக்கப்பட்டுள்ளன.



