என்ன வாடி போடினு பேச நீங்க யாரு? அஸீம்- ஆயிஷா சண்டை - பரபரப்பு ப்ரோமோ
பிக்பாஸ் நிகழ்ச்சியில் அஸீமின் தவறான வார்த்தை பிரயோகத்தால் உச்சக்கட்ட கோபத்தில் ஆயிஷா கத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிக்பாஸ் சீசன் 6, ஆரம்பித்து இரண்டாவது வாரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதில் 21 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில் இந்த சீசனில் போட்டியாளர்கள் இடையே கடும் வாக்குவாதங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. ஜி.பி.முத்து, தனலட்சுமி ஆரம்பித்து தொடர்ந்து அடுத்தடுத்து போட்டியாளர்கள் இடையே சண்டைகள் சூடுபிடித்துள்ளது.
வாக்குவாதம்
இந்நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ சற்று முன் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் “ஆயிஷா பிக்பாஸ் வீட்டிற்குள் வந்து தூங்குவதை தவிர என்ன செய்து இருக்கீங்க என்று அஸிம் கேட்க, கோபத்தில் கத்திய ஆயிஷாவை போடி என பேசினார் அஸிம், இதனால் டென்ஷனான ஆயிஷா சண்டையிடுகிறார்”.