எனக்கு அமீரை பிடிக்கும்.. மேடையில் உளறிய பாவனி - காதலுக்கு பச்சை கொடி காட்டிவிட்டாரா?
பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 5ல் கலந்துகொண்டு கவனத்தை ஈர்த்தவர் தான் சீரியல் நடிகை பாவனி. இந்நிகழ்ச்சியில் ரசிகர்களின் மனதை வென்ற இவர், இறுதி வரை சென்று மூன்றாவது இடத்தை பிடித்திருந்தார்.
இவர் பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது சக போட்டியாளரான அமீர் அவருடன் நெருங்கி பழகினார். மேலும், அந்நிகழ்ச்சியில் முத்த சர்ச்சையும் அரங்கேறியது.
தற்போது, வெளியே வந்த பின்னும் இருவரும் காதலிப்பதுபோல் இருப்பதும், பின் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் ஜோடியாக கலந்துகொண்டுள்ளனர்.
அந்த ஜோடி நிகழ்ச்சிகளிலும் ரொமான்ஸ்களை தெறிக்கவிடுகின்றனர். அதன்படி தற்போது வெளியான ப்ரோமோ காட்சியில் அதில் டாஸ்க் ஒன்றில், பாவனி அமீர் குறித்த கேள்விக்கு, அமீரை எனக்கு பிடிக்கும்.
ஆனா கொஞ்சம் டைம் வேணும் என கூறியுள்ளார். இதனைக் கேட்டு அமீர் பெரும் உற்சாகம் அடைந்துள்ளார்.
இதனைக்கண்ட ரசிகர்கள் இவர்களின் காதலுக்கு வீட்டில் பச்சைக்கொடி காட்டிவிட்டார்களா? என கேள்வியை எழுப்பி வருகின்றனர்.