நீண்ட நாள் காதலியை கரம் பிடித்தார் பிக்பாஸ் கவின்: வாழ்த்துக்களால் நனையும் ஜோடி
நீண்டநாட்களாக காதலித்து வந்த காதலியை கரம்பிடித்திருக்கிறார் பிக்பாஸ் கவின். இவருக்கு ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களை தெவித்து வருகிறார்கள்.
பிக்பாஸ் கவின்
பிக்பாஸ் கவினும் விஜய் தொலைக்காட்சியில் கனா காணும் காலங்கள் என்ற சீரியல் மூலம் அறிமுகமாகி அதன் பின் படிப்படியாக அடுத்தடுத்து சில சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார்.
அதிலும் அவர் நடித்த சரவணன் மீனாட்சி சீரியலில் வேட்டையன் கதாப்பாத்திரம் இவரை இன்னும் பிரபலமாக்கியது. சீரியலில் பிரபலமாகியப் பின் வெள்ளித்திரையில் ஜொலிக்க வேண்டும் என்று சில படங்களில் சின்ன சின்ன ரோலில் நடித்து வந்தார்.
பின்னர் தான் நட்புன்னா என்னானு தெரியுமா என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். ஆனால் அந்தப் படம் எதிர்ப்பார்த்த அளவில் வெற்றிப் பெறாத காரணத்தால் பிக்பாஸ் வீட்டில் நுழைந்தார்.
பிக்பாஸிற்கு பிறகு இவருக்கு பல படவாய்ப்புகள் வர லிப்ட் மற்றும் டாடா போன்ற வித்தியாசமான கதைகளை தெரிவு செய்து ரசிகர்களிடம் ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார்.
திருமணம்
மேலும், கவின் மற்றும் லாஸ்லியா இருவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்த வேளையில் காதலித்து வந்தார்கள் ஆனால் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியில் வந்ததும் இருவரும் சேர்வார்கள் என்று எதிர்பார்த்த வேளையில் பிரிந்து அவரவர்களின் வேலையை பார்க்க ஆரம்பித்து விட்டார்கள்.
இந்நிலையில், கவின் ஆகஸ்ட் 20ஆம் திகதி தான் காதலித்து வந்த மோனிகாவை திருமணம் செய்துக் கொள்ளப் போவதாக அறிவித்திருந்தார்கள்.
அந்தவகையில் ஆகஸ்ட் 20ஆம் திகதியான இன்று இவர்களின் திருமணம் எளிமையான முறையில் கோலாகலமாக நடத்திருக்கிறது.
இவர்கள் இருவருக்கும் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் என அனைவரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |