நயன்தாரா போல் பிக் பாஸ் ஜூலி கொடுத்த ஒரு போஸ்... கிளாமரைப் பார்த்து அதிர்ச்சியில் ரசிகர்கள்
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஒட்டுமொத்த மக்களையும் திசைதிருப்பிய ஜுலி பிக்பாஸ் வீட்டிற்கு சென்று பிரபலமானார். ஆனால் பிக்பாஸ் வீட்டில் இருந்து வந்த பின் ஜூலிக்கு பெரிதாக பட வாய்ப்புகளும் வாய்க்கவில்லை.
அடிப்படையில் நர்ஸான ஜூலி, பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்ததும், ‘மன்னர் வகையறா’ படத்தில் நடித்தார். அதன்பின்னர் பெரிய வாய்ப்புகள் எதுவும் அவருக்கு கிடைக்கவில்லை.
ஆனாலும் மனம் தளராத ஜூலி, தொடர்ந்து தன் புகைப்படங்களை அவ்வப்போது சோசியல் மீடியாவில் வெளியிட்டு தன் இருப்பைக் காட்டிக் கொள்வார். அந்தவகையில் ஜூலி இப்போது கிளாமரான புகைப்படம் ஒன்றினை பதிவிட்டுள்ளார்.
இது நயன்தாராவைப் போன்று போஸ் கொடுத்துள்ளதால் ஜுலியை பலரும் கலாய்த்தும், பாராட்டியும் கருத்து தெரிவித்து வருகின்றார்.
“Optimism is the faith that leads to achievement. Nothing can be done without hope and confidence.” pic.twitter.com/J53u49tDEV
— மரியஜூலியனா (Maria Juliana) (@lianajohn28) December 30, 2020