பிரபல நடிகையின் மகனுடன் காதல்? லீக்கான ஜூலியின் புகைப்படம்
நடிகையும், பிக்பாஸ் பிரபலமுமான ஜூலி, பிரபல வாரிசு நடிகருடன் டேட்டிங்கில் இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பிரபலமாகி, வீரத்தமிழச்சி என பெயர் எடுத்தார் ஜூலி.
ஆனால் பிக்பாஸில் கலந்து கொண்டு ரசிகர்களின் வெறுப்பை பெற்றார், ஓவியா ஆர்மியால் கடும் விமர்சனத்துக்கு ஆளான ஜூலியை இன்றும் கூற ரசிகர்கள் திட்டித்தீர்த்து வருகின்றனர்.
ஆனால் எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல், போட்டோஷீட், படங்கள் என நடித்து வரும் ஜூலி தற்போது பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.

இதே நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள ஷாரிக் ரியாசுடன் ஜூலி டேட்டிங்கில் இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.
ரியாஸ் கான்- உமா ரியாஸின் மகன் தான் ஷாரிக், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார்.
பென்சில் படத்தில் வில்லனாகவும் மிரட்டிய ஷாரிக், தற்போது அனிதாவுடன் ஜோடி போட்டு பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.