பிக்பாஸில் கதறியழுத ஜோவிகா... கைதட்டி சக போட்டியாளர்கள் கொடுத்த ரியாக்ஷன்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜோவிகா கதறியழுது தனது கருத்துக்களை பதிவிட்டது பார்வையாளர்களை நெகிழ வைத்துள்ளது.
பிக்பாஸ்
பிரபல ரிவியில் கடந்த ஞாயிற்று கிழமை ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இதன் தொகுப்பாளராக இந்த ஆண்டும் கமல்ஹாசனே இருந்து வருகின்றார். உள்ளே சென்ற முதல் நாளே 6 போட்டியாளர்கள் வேறு வீட்டிற்கு அனுப்பப்பட்டனர்.
ஆரம்பித்த முதல் நாளிலிருந்தே சண்டையும், சச்சரவுமாக ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸில் புதிய புதிய டாஸ்க் கொடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிகழ்ச்சியில் வனிதாவின் மகள் ஜோவிகாவும் போட்டியாளராக சென்றுள்ளார். பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திய இவர் உள்ளே சென்று அமைதியாக தனது தேவையை பெற்று வருகின்றார்.
வனிதா எதற்கெடுத்தாலும் சண்டையிடும் போட்டியாளராகவே இருந்து வந்தார். ஆனால் ஜோவிகா அவருக்கு எதிராக இருந்துவருவது பார்வையாளர்களை கவர்ந்து வருகின்றது.
கண்ணீர் விட்டு கதறிய ஜோவிகா
சமீபத்தில் டாஸ்க் ஒன்றில் புத்திசாலித்தனமாக செயல்பட்டு தனது அணிக்கு வெற்றியை தேடி தந்த இவர் நேற்றைய தினம் "Know your Housemates" என்கிற டாஸ்க் செய்து வந்தார்.
இதில் ஜோவிகா மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சரவண விக்ரம் கலந்து கொண்டு விவாதம் மேற்கொண்டனர்.
அப்பொழுது ஜோவிகா பேசுகையில், நான் ஒன்றை மட்டும் சொல்ல விருப்பப்படுகின்றேன்.. 2 நாட்களாக பள்ளி பற்றி அனைத்தும் சொல்லியிருந்தேன்... இதற்கு முன்பு எதிலும் அவ்வளவாக ஜெயித்தது கிடையாது... பள்ளியில் விவாத நிகழ்ச்சி செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டதாகவும், தன்னை அதனை செய்யவிடவில்லை... இந்த 3 தினங்களில் நடந்ததை பார்க்கவும் பொழுது எனக்கும் அந்த திறமை இருப்பது தெரிகின்றது என்று அழுதுள்ளார்.
இதனைக் கேட்ட சக போட்டியாளர்கள் ஜோவிகாவை உற்சாகப்படுத்தும் வகையில் கைதட்டி பாராட்டுகின்றனர்.
Jovika is happy to finally realize her abilities and to start winning in life.#BiggBossTamil7 pic.twitter.com/vGYIZEtnfL
— Bigg Boss Follower (@BBFollower7) October 4, 2023
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |