ஜனனி மாதிரி கூந்தல் அடர்த்தியாகவும் நீட்டமாகவும் இருக்கணுமா? அப்போ நெல்லிக்காய் மட்டும் போதும்
லியோ பட நடிகை ஜனனியின் கூந்தல் அடர்த்தியாக நீளமாக இருக்கணுமா? ஒரே ஒரு டிப்ஸை மட்டும் பின்பற்றினாலே போதும்.
இலங்கையில் இருந்து பிக்பாஸ் வழியாக தற்போது பிரபலமாக இருப்பவர் தான் நடிகை ஜனனி.
இவர் சமிபத்தில் விஜய் நடிப்பில் உருவான 'லியோ' படத்தில் அவரின் மகளாக நடித்துள்ளாராம்.
இந்நிலையில் அவரை போன்று அடர்த்தியாக கூந்தல் வளர பின்பற்ற வேண்டிய டிப்ஸ்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
தயிர் - 1/2 கப்
நெல்லிக்காய் பவுடர் - 2 மேசைக்கரண்டி
கறிவேப்பிலைப் பொடி - 1 மேசைக்கரண்டி
வெந்தயப் பொடி - 1 மேசைக்கரண்டி
செய்முறை
தயிர், வெந்தயப் பொடி, நெல்லிக்காய் பவுடர் என்பவற்றை பேஸ்ட் போல் செய்து தலையில் தடவி, அரைமணி நேரம் ஊறவைக்க வேண்டும்.
அதன்பின்னர் வெதுவெதுப்பான தண்ணீரில் முடியை அலச வேண்டும்.
ஒரு முக்கிய விடயம் என்னவென்றால், அரைமணி நேரத்துக்கு மேல் ஊறவைக்கக்கூடாது.
பலன்கள்
- நெல்லிக்காயானது, தலைப்பகுதியின் ஆரோக்கியத்தைப் பராமரிக்கும்.
- நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
- இளநரையைப் போக்கும்.
- முடியின் அடர்த்தியை அதிகரிக்கும்.
- தலைமுடியின் வளர்ச்சியை ஊக்கப்படுத்தும்.
- தலைப்பகுதியின் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.
- பொடுகு, உச்சந்தலை அரிப்பு என்பவற்றை தடுக்கும்.