இலங்கைப் பெண்ணுக்கு அடித்த லக்: பிரபல இசையமைப்பாளருடன் புதிய கூட்டணியில்
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான இலங்கைப் பெண் ஜனனி தன் நடிப்பாற்றலால் அடுத்தடுத்த வாய்ப்புகளை குவித்துக் கொண்டே போகிறார்.
பிக்பாஸ் ஜனனி
பிரபல தொலைக்காட்சியொன்றில் மிகவும் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சிதான் பிக்பாஸ். இந்நிகழ்ச்சியில் பல்வேறு கலைத்துறைகளைச் சேர்ந்தவர்கள் பலர் கலந்துக் கொண்டனர். இதில் இலங்கையைச் சேர்ந்த ஜனனியும் பங்குபற்றியிருந்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இறுதிவரை விளையாடுவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது, ஆனால் இவர் 70 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்து விட்டு குறைவான வாக்குகளால் வெளியேற்றப்பட்டார்.
பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பின் பல படவாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது. மேலும், தளபதி விஜய்யின் லியோ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளதாகவும் சூசகமாக தெரிவித்திருந்தார்.
ஜி.வியுடன் பிக்பாஸ் ஜனனி
பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு பல வெற்றி வாய்ப்புகளை தட்டிச் சென்றுக் கொண்டிருக்கும் ஜனனி அவ்வப்போது தனது சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிடுவதில் அதிகம் ஆர்வம் காட்டுபவர்.
இந்நிலையில், அவர் அண்மையில் ஜி.வி பிரகாஷுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனைப் பார்த்த நெட்டிசன் பல கேள்விகளை எழுப்பி வந்த நிலையில், அதற்கான பதிலை புகைப்படம் ஒன்றின் மூலம் வெளியிட்டிருந்தார்.
அதாவது ஜி.வி பிரகாஷ் இசையில் ஆல்பம் பாடல் ஒன்றில் கமிட்டாகி அந்தக் குழுவினர்களுடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது அதிகம் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |