பிக்பாஸில் இசைவாணி வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? உண்மையை கேட்டு ஷாக் ஆகிடாதீங்க
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து கடந்த வாரம் இசைவாணி வெளியேறிய நிலையில், அவருக்கு வழங்கப்பட்ட சம்பளம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் 49 நாட்கள் தாக்குபிடித்து வெளியேறிய இசைவாணிக்கு பின்பு வைல்டு கார்ட் எண்ட்ரி உள்ளே சென்றுள்ளனர்.
இவர் வாரத்திற்கு ஒரு லட்சம் வீதம், 7 வாரத்திற்கு ஏழு லட்சம் ரூபாய் பெற்று பிக்பாஸிலிருந்து வெளியேறியுள்ளாராம். ஆரம்பத்தில் டைட்டில் வின்னர் ஆகும் நிலை கூட இருந்த இசைவாணி, சமீபத்தில் அவரின் மாற்றமே இந்த எலிமினேஷனுக்கு முக்கிய காரணமாக உள்ளது.
ஆம் தனது திறமையினை வைத்து, மற்றவர்களை மகிழ வைக்க தவறியதுடன், சக போட்டியாளர்களுடன் சேர்ந்து சண்டையிடுவது, முகத்தை தூ்ககி வைத்துக்கொள்வது என இருந்ததால், ரசிகர்களின் வெறுப்பினை பெற்றுள்ளார்.
ஆனாலும் இவ்வளவு ஊமையாக இருந்துவிட்டு வெறும் 7 வாரத்தில் ஏழு லட்சம் சம்பளம் வாங்கியுள்ளாரே என்று ரசிகர்கள் வாயடைத்துப்போயுள்ளனர்.