இனி உங்களை பார்க்க முடியாதா அண்ணா? ஆனந்த கண்ணனை நினைத்து கதறி அழுத ரம்யா
சமீபத்தில் மறைந்த விஜே ஆனந்த் கண்ணன் குறித்து பிக் பாஸ் பிரபலம் ரம்யா உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.
முன்னணி தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றிய விஜே ஆனந்தின் திடீர் மறைவு சின்னத்திரையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவர் 90'ஸ் கிட்ஸ்களுக்கு பிடித்த மிகவும் தொகுப்பாளர் என்று கூறலாம். ஆனந்த் கண்ணனுக்கு சமூக வலைத்தளங்களில் இன்று வரை பல ரசிகர்கள் கூட்டம் உள்ளது.
இவர் சில தினங்களுக்கு முன்பு புற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டதால் கடந்த 16ஆம் திகதி மரணமடைந்தார்.
கிராமிய கலைகளை உலகம் முழுவதும் கொண்டு சேர்த்து 48 வயதிலே உயிரிழந்தது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே பிக் பாஸ் பிரபலம் ரம்யா மறைந்த ஆனந்த் கண்ணன் குறித்து உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
அவர் கூறியது, எனது கஷ்டங்கள், சந்தோஷங்கள் போன்ற எல்லா சமயத்திலும் எனக்கு ஒரு தோழராய் கைகொடுத்தவர் ஆனந்த் கண்ணன்.
அவர் இப்பொழுது உலகத்தில் இல்லை என்பதை பற்றி நினைக்கும் பொழுது என்னால் ஏற்றுக்கொள்ளவே கொள்ளவே முடியவில்லை.
ஒருவரை எப்படி நேசிக்க வேண்டும், எப்படி வாழ வேண்டும் போன்றவை கற்றுக்கொடுத்தவர்.
நான் திருமணம் செய்து கொள்ளலாமா என்று அவரிடம் தான் முதலில் அனுமதி பெற்றேன்.
அவர் மிகவும் நேர்மறையான ஆன்மா. அவரைச் சுற்றியுள்ள அனைவரையும் மகிழ்ச்சியாக வைத்திருந்தார்.
இன்றுவரை அவர் இறந்துவிட்டார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. நான் இனி உங்களை பார்க்க முடியாதே அண்ணா.. என்று உணர்ச்சிகள் போங்க தனது சோகத்தை பகிர்ந்து கொண்டார்.
மேலும், அவருக்கு என்ன ஆனது என்று கேட்டுக்கொண்டு இருப்பவர்களுக்கு, அவருக்கு ஆசன குடல் புற்றுநோய் இருந்தது. அது அவரின் உடல் முழுவதும் பரவிவிட்டது என்று விளக்கமளித்துள்ளார்.