பிக்பாஸ் சீசன் 9 இன் கடைசி குறும்படம்! வியானாவை வறுத்தெடுத்த விஜய் சேதுபதி
பிக்பாஸ் சீசன் 9 இன் இறுதி குறும்படம் என படத்தை போட்டுக்காட்டி தொகுப்பாளர் விஜய் சேதுபதி, வியானா மற்றும் பிரவீனை வறுத்தெடுத்தெடுத்துள்ளார்.
பிக்பாஸ்
ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகி வரும் ஒரு முக்கிய நிகழ்ச்சியான பிக்பாஸ் 8 சீசன்களை கடந்து, தற்போது 9 ஆவது சீசனை வெற்றிகரமாக ஒளிபரப்பி வருகின்றது.

பிக்பாஸ் தமிழ் சீசன் 9 அடுத்த வாரத்துடன் முடிவடையவுள்ள நிலையில் தற்போது விறுவிறுப்பாக சென்றுக்கொண்டிருக்கின்றது.
கடந்த வாரத்தில் டிக்கெட் டூ ஃபினாலே, இந்த வாரத்தில் பணப்பெட்டி டாஸ்க் என இறுதி கட்டத்தில் எட்டிவருகின்றது.

கானா வினோத் டைட்டில் வின்னராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரது இந்த முடிவை யாரும் எதிர்பார்க்கவில்லை.
18 லட்சத்துடன் வெளியேறிய கானா வினோத்தை பிக்பாஸ் தனது வார்த்தையினால் பெருமைபடுத்தியதுடன் விஜய் சேதுபதியும் கண்ணாடி அணிவித்து மிகவும் கௌரவமாக வழியனுப்பி வைத்தார்.

இந்நிலையில், பிக்பாஸ் சீசன் 9 இன் இறுதி குறும்படம் என படத்தை போட்டுக்காட்டி தொகுப்பாளர் விஜய் சேதுபதி, வியானா மற்றும் பிரவீனை வறுத்தெடுத்தெடுத்துள்ள promo காணொளி தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |