எடையை அதிகரித்து சூப்பர் ஹீரோவாக மாறிய பிக்பாஸ் அசீம்... இப்போ எப்படி இருக்கார்னு பாருங்க
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் சர்ச்சையான போட்டியாளராக வெடித்து டைட்டில் வின்னராக வெற்றிப் பெற்ற பிக்பாஸ் அசீமின் அண்மைய வீடியோ இணையத்தில் அதிகம் வைரலாகி வருகின்றது.
பிக்பாஸ் அசீம்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் சின்னத்திரை நடிகராக இருந்த அசீம் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக வாகை சூடியினார்.
பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது ஒவ்வொரு வாரமும் ஏதோ ஒரு சர்ச்சை இல்லையென்றால் சண்டையோடு தான் ஆரம்பித்தார்.
ஆனாலும் இவருக்கு வாரம்தோறும் ஆதரவாளர்கள் அதிகரித்துக் கொண்டே வந்து இன்று வெற்றியாளர் என்ற பட்டத்தையும் வாங்கிக் கொடுத்திருந்தார்கள்.
மேலும், பிக்பாஸ் இறுதிப்போட்டியில் ஷிவின், விக்ரமன் ஆகிய பிற இரண்டு போட்டியாளர்களும் பிக்பாஸ் பைனலுக்கு தகுதியாகி இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களைப் பிடித்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு காணாமல் போன அசீமிற்கு படவாய்ப்புகள் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்து.
இந்நிலையில், தற்போது அவர் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் வீடியோவில் உடல் எடை அதிகரித்து படும் மாஸாக இருக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகின்றது.