கதறி கதறி அழுத பிக் பாஸ் அமீரின் தங்கை.... இப்படி ஒரு சோகமா? காட்டுத் தீயாய் பரவும் வீடியோ
பிரபல டான்ஸ் மாஸ்டர் அமீரின் தங்கைகள் டான்ஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது .
அலெனா மற்றும் ஆயிஷா ஆகிய இருவரும் கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டான்ஸ் வெர்சஸ் டான்ஸ் என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஆடினர். இவர்களுக்கு அமீர் தான் டாஸ் மாஸ்டர்.
இந்த நிலையில் சமீபத்தில் அவர்கள் இந்த நிகழ்ச்சியில் வெளியேறி உள்ளனர்.
இதுகுறித்து அலெனா, ஆயிஷாவின் தாயார் தனது சமூக வலைத்தளத்தில், ‘தயவுசெய்து அழுது என்னை அமீர் கிட்ட மாட்டி விடாதே, ஏற்கனவே அமீர் வெளியே வந்து என்ன சொல்வான் என்ற பீதி எனக்கு இருக்கிறது.
உனக்கு தோல்வி புதிதான ஒன்று என்றாலும் இனிமேல் கவனத்துடன் இருந்து வெற்றியை நோக்கி செல்வோம்’ என்று பதிவு செய்துள்ளார்.
இது குறித்த வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றது. கதறி அழும் மாணவிக்கு ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.