நான் சொன்னத அவ கேக்கல... குடும்பமே கஷ்டத்தில்! ஐஷுவின் தந்தை
சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த தன் மகள் ஐஷு குறித்து அவரது தந்தை அளித்த பேட்டி வைரலாகி வருகிறது.
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோவில் மிக முக்கியமானது பிக்பாஸ்.
6 சீசன்களை கடந்து 7வது சீசன் நடந்து முடிந்துள்ளது, கடைசி வரை வன்மம், வெறுப்பு, பகை என பரபரப்புக்கு பஞ்சமே இல்லாமல் நடந்து முடிந்துள்ளது.
இந்நிலையில் இந்த ஷோவில் கலந்து கொண்ட ஐஷு குறித்து அவரது தந்தை அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, பிக்பாஸ் பற்றி எந்தவொரு முன் ஏற்பாடும் இல்லாமல் இருந்தது.
செப்டம்பர் 10ம் திகதி தான் எங்களுக்கு தெரியும், ஐஷுக்கும் தெரியும். நான் போக வேண்டாம் என கூறினேன், நிகழ்ச்சி பற்றி எனக்கு தெரிந்தளவு எல்லாமே எடுத்து சொன்னேன்.
அவள் கலந்துகொள்ளாமல் இருப்பதற்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதை செய்தேன், ஆனால் அவள் பிடிவாதமாக இருந்தாள், ஒரு கட்டத்தில் தவிர்க்க முடியாதபோதே அனுமதி அளித்தேன்.
அவள் பிக்பாஸ்-க்கு சென்ற பின்னர் எங்கள் வாழ்க்கையே மாறிவிட்டது, நெகட்டிவ் விமர்சனங்கள் மட்டுமே வருகிறது.
இத்தனை ஆண்டுகளாக இன்ஸ்டாகிராமில் இருக்கிறோம், நெகட்டிவாக வந்தது கிடையாது. ஆனால் பிக்பாஸ் சென்ற பின்னர் நெகடிவ் விமர்சனங்கள் மட்டுமே, அவள் வெளியே வந்த பின்னர் மன்னிப்பு கடிதம் அவராகவே எழுதினார்.
அதை பதிவிட்டு சில நாட்களில் அவளே அதை எடுத்துவிட்டார், உங்களுக்கு பிடிக்காத போட்டியாளர்களை விமர்சித்துவிடுங்கள், அவரது குடும்பத்தையும் சேர்த்து பேசுவது தவறான ஒன்று,
நாங்கள் மன உளைச்சலில் இருந்தோம்.
எப்படி இருந்தாலும் அவள் என்னுடைய மகள், அவளது கனவை நிறைவேற்றவே போராடுவேன் என தெரிவித்துள்ளார்.