இந்த வாரம் எலிமினேஷனில் நடந்த டுவிஸ்ட்.. தப்பிய போட்டியாளர் யார் தெரியுமா? சம்பள விவரம்!
இந்த வாரம் பிக்பாஸ் சீசன் 7 ல் எலிமினேட்டாகிய போட்டியாளரின் சம்பளம் தொடர்பான தகவல் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் 7
நாம் அனைவரும் பெரும் எதிர்பார்ப்புகளுடன் காத்திருந்த பிக்பாஸ் 7 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி பிரமாண்டமாக ஆரம்பமானது.
இந்த சீசனில் கூல் சுரேஷ், பவா, சரவண விக்ரம்,விசித்ரா, நிக்ஸன், ஐஷூ, விஜய் வர்மா, அனன்யா ராவ், யுகேந்திரன், பிரதீப், விஷ்ணு, பூர்ணிமா, மாயா, ஜோவிகா, மணி, ரவீனா, அக்ஷயா, வினுஷா ஆகிய 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
கடந்த ஆறு சீசன்களை வெற்றிக்கரமாக நிறைவு செய்த பிக்பாஸ் இந்த சீசனில் இரண்டு வீடு எனக் கூறி போட்டியாளர்களுக்கு டுவிஸ்ட் கொடுத்துள்ளது.
இந்த நிலையில் கடந்த வாரம் ஐசு வெளியேற்றப்பட்ட நிலையில் இந்த வாரம் அக்ஷயா, விக்ரம், கானா பாலா ஆகிய மூவரும் குறைவான வாக்குகள் பெற்று எலிமினேட்டாக தயாராகியுள்ளனர்.
சம்பள விவரங்கள்
வயதில் மூத்தவரும் நெஞ்சங்களை கொள்ளை கொண்டவருமான கானா பாலா மக்களால் வெளியேற்றப்பட்டுள்ளார்.
அடுத்து வரும் வாரங்களில் டபுள் எவிக்ஷன் வைத்து அக்ஷயா மற்றும் விக்ரம் வெளியேற்ற வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றார்கள்.
இப்படியொரு நிலையில் வெளியேறிய கானா பாலாவிற்கு ஒரு நாளைக்கு 25,000 ரூபாய் சம்பளமாக பேசப்பட்டுள்ளது.
மேலும் இவர் இரண்டு வாரங்கள் பிக்பாஸ் வீட்டில் தாக்கு பிடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |