நீங்க ஜனனியை லவ் பண்றீங்களா? முகத்திற்கு நேரே கேட்ட நடிகை! பதறிப்போன நெட்டிசன்கள்
அமுதவானன் ஜனனியை லவ் பண்ணுவதாகத்தான் நான் இவ்வளவு காலம் நினைத்துக் கொண்டிருதேன் என நிகழ்ச்சியொன்றில் நடிகை ஸ்ருதிகா கூற அரங்கமே அதிர்ச்சிக்குள்ளானது.
பிக்பாஸ் சீசன் 6
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த மாதம் முடிவுக்கு வந்தது. இந்நிகழ்ச்சி கடந்த ஒக்டோபர் மாதம் 9ஆம் திகதி 21 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்டது.
ஆரம்பத்தில் 20 போட்டியாளர்களுடன் ஆரம்பித்து சில நாட்கள் கழித்து வைல்ட் கார்ட் என்ட்ரியாக மைனா நந்தினி வீட்டிற்குள் நுழைந்தார்.
அவ்வாறே மக்களின் வாக்குகளின் அடிப்படையில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு போட்டியாளர்கள் குறைவான வாக்குகளைப் பெற்று வெளியேறி இறுதியில் மூன்று பேர் மாத்திரம் வெற்றிப் போட்டியாளர்களாக திகழ்ந்தார்கள்.
100 நாட்களும் பிக்பாஸ் வீட்டில் சண்டை, சச்சரவு, பாசம், நகைச்சுவை காதல் என பல உணர்ச்சிகளை போட்டியாளர்கள் வெளிப்படுத்தி பார்ப்பவர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தாமல் கொண்டுசென்று இறுதியில் அசீம் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டிருந்தார்.
ஜனனியை லவ் பண்ணுகிறீர்களா?
அண்மையில் நிகழ்ச்சி ஒன்றிற்காக அமுதவானன், விக்ரமன், ஷிவின் மூவரும் கலந்துக் கொண்டிருந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் ஸ்ருத்திகா அமுதவாணனைப் பார்த்து திருமணம் ஆகிவிட்டதா என அவர் கேட்க, அவருக்கு 3 பிள்ளைகளே இருக்கிறது என ஷிவின் கூறினார்.
'நீங்க ஜனனியை லவ் பண்றீங்கனு லைட்டா நெனச்சேன்' என அந்த ஷோ ஜட்ஜ் ஆக இருக்கும் ஸ்ருத்திகா சொல்ல அமுதவாணன் கடும் அதிர்ச்சி ஆனார்.
ஜனனி எனக்கு உடன் பிறக்காத தங்கை மாதிரி என கூறி விளக்கம் கொடுத்திருந்தார்.