சிபியால் கண்ணீர் விட்டு கதறி அழுத அக்ஷரா.. ரணகளமாகும் பிக்பாஸ் வீடு!
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கடந்த நாளில் ஸ்ருதி குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் வெளியேறி இருந்தார். பலரும் போட்டியில் சிறப்பாக விளையாடத அபினய் வெளியேற்றப்படுவார் என எண்ணிய நிலையில், ஸ்ருதி வெளியேறியது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருந்தது.
இந்நிலையில், இன்றைக்கான முதல் ப்ரோமோவில, பிக்பாஸ் இந்த வாரத்திற்கான தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான போட்டிக்கான டாஸ்கை கொடுத்துள்ளது.
அதில், யார் தலைவர் ஆக விருப்பம் இல்லையோ அந்த தலையின் பொம்மையை உடைக்க வேண்டும் என கூற, சிபி அக்ஷரா உருவ பொம்மையின் தலையை உடைக்கிறார்.
இதைக்கண்ட அக்ஷரா வருணிடம் கண்ணீர் விட்டு கதறி பேசியுள்ளார். எப்படி இன்றைய நாள் டாஸ்க்கால் போட்டியாளர்களிடம் சண்டை வெடிக்கப்போகிறது என்பதில் சந்தேகமில்லை.