பிக்பாஸ் கொடுத்த டாஸ்க்! நிரூப்பால் வீட்டை விட்டு வெளியேறவும் தயார் என கூறிய அக்ஷரா; பரபரப்பில் போட்டியாளர்கள்
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில், இந்த வாரம் சின்னப்பொண்ணு குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் வெளியேற்றப்பட்டார். ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில், அபிஷேக், நாடியா, நமீதா என வெளியேறிய நிலையில் சின்னப்பொண்ணு தற்போது வெளியேறியுள்ளார்.
ஓரளவுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி சூடுபிடித்ட நிலையில், இன்றைக்கான முதல் ப்ரோமோ காட்சி வெளியாகி இருக்கிறது. இதில், பிரியாங்கா பிக்பாஸ் கொடுத்த அட்டவணையை வாசிக்கிறார்.
அதில் இந்த பிக்பாஸ் வீட்டை சொந்தமாக்கிய நிரூப் வீட்டில் உள்ள பெண்களில் யாரையாவது ஒருவரை தன் உதவியாளராக அறிவிக்க வேண்டும் என கூற, நிரூப் அக்ஷரா பெயரை சொல்ல, அதற்கு அக்ஷாரா பிக்பாஸ் எனக்கு விருப்பம் இல்லை என கூறுகிறார்.
இல்லையென்றால் வீட்டை விட்டு வெளியேற தயார் என சொல்ல நிரூப், இதான் பிக்பாஸ் அவ முதல்ல இருந்தே சொல்லிட்டு இருக்க நீங்க வீட்டுகுள்ளேயே வைச்சுட்டு இருக்கீங்க என தெரிவிக்கிறார்.
இதற்கு நக்கலாக ராஜூ தீபாவளி பிரச்சினை பாருங்க கொண்டாட்டுங்கள் என தெரிவிக்கிறார். எப்படி இன்றைய நிகழ்ச்சியில் சண்டை முற்றும் என்பதில் சந்தேகமில்லை.