கமலின் முன்பே நிரூப் அக்ஷரா இடையே வெடித்த சண்டை - அப்படி என்ன பிரச்சினை தெரியுமா?
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியானது தற்போது 27 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. பழைய சீசன்களை விட இந்த சீசன் டிஆர்பியில் செம்ம அடி வாங்கியுள்ளது.
இதனிடையே இதுவரை நமீதா, நாடியா, அபிஷேக் போன்றவர்கள் இதுவரை வெளியாகியுள்ளனர். இதனிடையே, இந்த வாரம் யார் வெளியேறுவார்கள் என தெரியாமல் இருந்து வருகிறது. சின்ன பொண்ணு, இசைவாணி, சுருதி, அபினய் ஆகிய நான்கு பேரும் டேஞ்சர் ஜோனில் உள்ளனர்.
இவர்களில் யார் வெளியேற போகிறார் என்பதை கமல் இன்று அறிவிக்க உள்ளார். இந்நிலையில், இரண்டாவது ப்ரோமோ காட்சியில், கமல் இந்த சண்டையோட நோக்கமே எவிக்ஷன் தான்.
இதில் 7 சாய்ஸ் இருக்கு. யாருக்கு எது பொருந்தும் என கேட்கிறார். நிரூப், அக்ஷராவிற்கு போலி என்ற பேட்ஜை கொடுத்ததாக கமலிடம் சொல்கிறார். அதற்கு அக்ஷரா, இப்போது கூட அவரை என்னால் மன்னிக்க முடியவில்லை என கண்கலங்கியபடி சொல்கிறார்.
அப்படி நான் பண்ணினேன், என்ன பிரச்சனை என சொல் என கேட்கிறார் நிரூப். நிறைய இருக்கு. அதை இப்போ சொல்ல முடியாது. நினைவிற்கு வரும் போது சொல்கிறேன் என்கிறார்.
இப்படி இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடக்கிறது. இதைத் தொடர்ந்து அக்ஷரா அழுதப்படி தனியாக அமர்ந்திருக்கிறார். எப்படி கமல் இதற்கு ஒரு முடிவை கொடுப்பார் என தெரிகிறது.