பிக்பாஸ் வீட்டை விட்டு ஐக்கி பெர்ரி வெளியேறுகிறாரா? இன்றைய நாளின் ஏற்படப்போகும் சம்பவம்!
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியானது விறுவிறுப்பாக சென்றுக்கொண்டிருக்கும் நேரத்தில் நடிகர் கமலஹாசனுக்கு கொரோனா ஏற்பட்டு இந்த வாரம் தொகுத்து வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
மேலும், கமலுக்கு பதிலாக ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்குவார் என கூறப்படுகிறது. ஒரு பக்கம் கமலே விர்ச்சுவல் மூலமாக பேசுவதாகவும் கூறப்படுகிறது.
ஆனால், இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, இன்றைய நாளில் யார் வெளியேறப்போகிறார்கள் என குழப்பமாகவே சென்று கொண்டிருக்கிறது.
அதிலும், தாமரை வெளியேறுவார் என கூறப்பட்ட நிலையில், தற்போது ஐக்கி பெர்ரி வெளியேறலாம் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இன்றைய நாளில் என்னதான் நடக்கப்போகிறது என்பதை பற்றி இனி வரும் ப்ரோமோ காட்சியின் மூலம் தான் தெரியவரும்.