பாத்ரூமில் நிரூப் செய்த வேலை... விளக்கமாற்றால் அடித்த மதுமிதா; உடனே பிக்பாஸ் எடுத்த முடிவு!
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியானது தற்போது போட்டிகளால் களைக்கட்டி வருகிறது. ஒவ்வொருத்தரின் சுயரூபமும் வெளிப்பட்டுக்கொண்டு இருக்கிறது.
இந்த நிலையில், நேற்றைய நிகழ்ச்சியில், பிக்பாஸ் கொடுத்த டாஸ்க்கான ஊரு விட்டு ஊரு வந்த டாஸ்கில் கிராமத்தினர் நகரத்தினர் என இரண்டு குழுவாக பிரிக்கப்பட்டனர்.
இந்த வாரம் நெருப்பின் வாரம் என்பதால் இதில் நெருப்பை வைத்து பல போட்டிகள் நடத்தப்பட்டன. அதன்படி, மெட்ராஸ் நிறுவனத்தின் ஸ்பான்சர் போட்டியில், பாத்ரூம் ஏரியாவில் அமர்ந்திருந்த மதுமிதாவிடம் எறும்பை காட்டி பயமுறுத்தியுள்ளார் நிரூப்.
அதை தடுக்க முயன்று பிரியங்கா பவுலை உடைத்துவிட சுத்தம் செய்துள்ளார். பின்னர் நிரூப் மற்றும் பிரியங்கா மாறி விளையாடி கொண்டிருக்க, பிரியங்க மதுவை பார்த்து ஏய் என்னை காப்பாற்று என கூற மதுமிதா நிரூப்பை அதட்டினார்.
அதன் பின்னர் கீழே கிடந்த விளக்கமாறை கொண்டு நிரூப்பை அடித்துள்ளார் மதுமிதா. மேலும் டேய் என்னடா எருமை என திட்டி தீர்த்துள்ளார். இதனால் நிரூப் பிக்பாஸ் இவ என்னை விளக்கமாத்தால் அடித்துவிட்டார் எனவும், இது எப்படி வெளியே தெரியும் பாரு என கூறினார்.
மேலும், இவர்கள் தொடர்ந்து விளையாடி ஷேவிங் போமை வீணாக்கியுள்ளனர். இதன்பின்னர், பேசிய பிக்பாஸ் மைக்கில் தண்ணியோ வேற எதுவும் படாமல் பார்த்துக்கொள்ளுங்கள் என கூறினார்,.