இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுபவர் இவர்தான்! உண்மை காரணம் இதுவா?
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியானது 45 நாட்களை கடந்து விட்ட நிலையில், இதுவரை இந்த ஷோவில் பழைய டிஆர்பி-யை எட்டவில்லை. என்னதான், போட்டியாளர்களுக்கு பல டாஸ்குகள் கொடுக்கப்ட்டாலும், விறுவிறுப்பு இந்த சீசன் மிகக்குறைவு தான்.
இதுவரை நாடியா சங், அபிஷேக் ராஜா, சின்னப்பொண்ணு, ஸ்ருதி, மதுமிதா என 5 போட்டியாளர்கள் இதுவரை எவிக்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த வாரம் எவிக்ஷன் புராசஸிற்கான நாமினேஷன் புராசஸில் 9 போட்டியாளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
அதில், நாமினேஷன் லிஸ்ட்டில் பாவனி, இமான் அண்ணாச்சி, அபினய், சிபி, தாமரை செல்வி, இசைவாணி, ஐக்கி பெர்ரி, நிரூப் மற்றும் அக்ஷரா ரெட்டி என 9 பேர் இடம் பிடித்துள்ளனர். அவர்களில் யார் இந்த வாரம் வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
இந்நிலையில், கடந்த சில வாரங்களாக எவிக்ஷனில் இறுதி வரை வந்ததால் அவர்களில் யாராவது ஒருவர் இந்த வாரம் வெளியேறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இசைவாணி வாண்ட்டடாக வம்பில் சிக்கி தனது பெயரை கெடுத்துக் கொண்டார். இமான் அண்ணாச்சி கொடுத்த தொட்டாச்சினிங்கி என்ற விருதை தூக்கி எறிந்தார்.
இதற்காக கமலே அவரை தொட்டாச்சினிங்கி என்று விளாசினார். இதனால், பிக்பாஸ் வீட்டில் அடிக்கடி அனைவரிடமும் முகத்தை காடி வரும் இசைவாணிக்கு வாக்குகளும் குறைந்துள்ளன.
சிபி, அக்ஷரா, இமான் அண்ணாச்சி, அபினய், பாவனி ஆகியோர் வரிசையே முதல் 5 இடங்களை பிடித்துள்ளனர். ஐக்கி பெர்ரி, தாமரை செல்வி, நிரூப் ஆகியோர் அடுத்த 4 இடங்களை பிடித்துள்ளனர்.
இதில் குறைவான வாக்குகளை பெற்று இசைவாணி கடைசி இடத்தை பிடித்துள்ளார். இதனால் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து இசைவாணிதான் வெளியேறுகிறார் என கூறப்படுகிறது.