உடல் எடையைக் குறைத்த குஷ்பு மற்றும் பிரபு! சின்ன தம்பி 2 குறித்து ரசிகர் கேட்ட கேள்வி: குஷ்பு அளித்த பதில் என்ன?
பிரபு மற்றும் குஷ்புவின் உடல் எடை குறைந்த நிலையில் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, சின்ன தம்பி 2 படம் குறித்து வேண்டுகோள் விடுத்த ரசிகருக்கு குஷ்பு பதிலளித்துள்ளார்.
சமீபத்தில் நடிகர் பிரபுவின் உடல் எடை குறைந்த நிலையில் இருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலானது. பொன்னியின் செல்வன் படத்துக்காக அவர் எடை குறைந்ததாகக் கூறப்பட்டது.
மேலும் நடிகை குஷ்புவும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் எடை குறைந்த நிலையில் முன்பை விட ஒல்லியாக இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
இந்த நிலையில் ரசிகர் ஒருவர் எடைந்த குறைந்த நிலையில் இருக்கும் பிரபு மற்றும் குஷ்புவின் புகைப்படத்தைப் பகிர்ந்து, இயக்குநர் வாசு சார், சந்திரமுகி இரண்டாம் பாகத்துக்கு முன், சின்னத்தம்பி இரண்டாம் பாகம் எடுக்கலாம் என்று குறிப்பிட்டிருந்தார்.
அதற்கு பதிலளித்த நடிகை குஷ்பு சிரிப்பது போன்ற ஸ்மைலியை பதிலாக அளித்துள்ளார். உண்மையில் சின்னத்தம்பி 2 இப்பொழுது எடுத்தால் நன்றாக இருக்கும் என்பதே ரசிகர்கள் பலரது கருத்தாக இருக்கிறது.
பி.வாசு இயக்கத்தில் பிரபு - குஷ்பு இணைந்து நடித்த சின்னத்தம்பி திரைப்படம் கடந்த 1991 ஆம் வருடம் வெளியாகி மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்தது. தொடர்ந்து கன்னடம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் மறு உருவாக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Director P.Vasu Sir Chandramukhi 2 Edukura Munna , Chinna Thambi 2 Edukalam ??@khushsundar #Prabhu pic.twitter.com/LyjW67Bafy
— ஆண்டவனின் செல்லப்பிள்ளை 3.0 ? (@Revenge3_offi) September 26, 2021