பிக்பாஸ் சீசன் 5ல் போட்டியாளராக பிரபல மாடல்: வெளியே லீக்கான தகவல்
பிக் பாஸ் 5ல் பிரபல மாடல் பிரதாயினி கலந்து கொள்வது உறுதி ஆகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகவிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர். பல ரிவிகளில் பல ரியாலிட்டி ஷோ நடந்தாலும், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என்று மக்களிடம் தனி வரவேற்பு உள்ளது.
அக்டோபர் 3ம் தேதி பிக் பாஸ் 5 தொடங்கவிருக்கும் இந்நிகழ்ச்சிக்கு போட்டியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கின்றனர்.
அவ்வப்போது போட்டியாளர்கள் யார் யார் உள்ளே செல்ல இருக்கின்றனர் என்ற தகவலும் அவ்வப்போது வெளியாகி வருகின்றது. ஷகீலா மகள் மிலா, தொகுப்பாளினி பிரியங்கா தொடங்கி அதிகம் பரிட்சயம் இல்லாத நபர்கள் வரை உத்தேச பட்டியலில் பெயர் இருக்கிறது.
இந்நிலையில் பிரபல மாடல் பிரதாயினி என்பவர் பிக்பாஸ் வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுவரை நடைபெற்ற சீசனில் பிரபல மாடல்கள் கலந்து கொண்ட நிலையில், இந்த சீசனிலும் எதிர்பார்க்கப்படுகின்றது.
பிரதாயினி பல விளம்பர படங்களில் நடித்து இருக்கிறார். அவர் போதை ஏரி புத்தி மாறி என்ற படத்திலும் நடித்திருப்பதாக கூறப்படுகின்றது.
