பிக் பாஸ் பெண் போட்டியாளரை ஆவேசத்தில் கிழித்து தொங்க விட்ட மலேசிய தமிழர்! பைத்தியக்காரன் போல் இருக்கிறதா?
பிக் பாஸ் வீட்டில் நாடியா சாங் சொன்னது அத்தனையும் பொய் எனக்கூறி மலேசிய தமிழர் ஒருவர் வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
நாடியா சாங் தன்னைப் பற்றி கூறும் போது, மிகவும் சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்ததாகவும், தங்கள் வீட்டில் ஒரு அறைதான் இருந்ததாகவும், 15 வயது வரை மெத்தையில் நான் உறங்கியது இல்லை, அம்மா மிகவும் கண்டிப்பானவர்.
அப்பா மது அருந்துபவர். ஒருமுறை தன்னுடைய அம்மா போலீசாரிடம் தன்னை அடிவாங்க வைத்த போது அவர் மீது வெறுப்பு வந்ததாகவும் கூறினார்.
மேலும் தன்னுடைய 15வது வயதிலேயே ஹோட்டல் ஒன்றில் ஹவுஸ் கீப்பிங் வேலை செய்ததாக தெரிவித்தார்.
இதுகுறித்து தற்போது மலேசிய தமிழர் நாடியா சொல்வது அனைத்தும் பொய், எங்களையெல்லாம் பார்ப்பதற்கு உங்களுக்கு எப்படி தெரிகிறது? பைத்தியக்காரன் போல் இருக்கிறதா? எது சொன்னாலும் கேட்டுக் கொண்டு பேசாமல் இருப்போம் என்று நினைத்தீர்களா... சரி மலேசியாவில் இருந்து ஒரு தொலைக்காட்சிக்கு நிகழ்ச்சிக்கு ஒரு பெண் சென்றுள்ளார்.
எனவே நல்லதோ, கெட்டதோ, அவருக்கு ஆதரவு தெரிவிக்கலாம் என்று நினைத்தேன். ஆனால் ஒட்டுமொத்த மலேசிய மானத்தையும் வாங்கி இருக்கிறார் நாடியா என ஆவேசமாக பேசியுள்ளார்.