அந்த பாட்டு எங்க இருந்து வந்தது... பிக்பாஸ் முகேன் ராவ் ஓபன் டாக் (VIDEO)
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் வெற்றியடைந்தவர் தான் முகேன் ராவ். இவரைப்பற்றி தெரியாதவர்களே இல்லை. தற்போது படவாய்ப்புகளால் பிஸியாக இருக்கும் இவர் வேலன் படத்திலும் நடித்துள்ளார்.
அதற்காக நமது சினி உலகம சேனலில் பேசிய இவர், பல அனுபவங்களையும் பகிர்ந்துள்ளார். மேலும், பிக்பாஸ் வீட்டில் இருந்த அப்போ பாடிய பாடலை வைத்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த முகேன் ராவ், “சத்தியமா நான் சொல்லுறேன் டி பாடலை நான் பிக்பாஸ் வரும் முன்னாடியே எழுதி வச்சிட்டேன், அந்த நேரத்தில் ஆல்பம் பாடலை எடுத்துக்கொண்டிருக்கும்போது பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என்னை அழைத்தார்கள்.
அதன்பின்பு, அந்த பாடலை பிக்பாஸ் வீட்டில் பொழுதுபோகவில்லை என்ற நேரத்துல தான் பாடினேன். ஆனால் இரண்டு வருடங்கள் கழித்தும் இந்த அளவுக்கு அந்த பாட்டு வைரலாகும் ஆகும் என்பது தெரியவில்லை.
அதற்காக நான் ரசிகர்களுக்கு தான் நன்றி சொல்லவேண்டும்,. எனக்கூறியுள்ளார். மேலும், வேலன் படத்தில் நடித்த அனுபவத்தையும் பகிர்ந்துள்ளார்.