Bigg Boss 10 Home Tour: பிக்பாஸ் சீசன் 10 பிரம்மாண்ட வீடு.. எப்படி இருக்கு தெரியுமா?
பிக்பாஸ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 10 வரும் செப்டம்பர் 6ஆம் தேதி முதல் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது. இந்த சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார்.
பிக் பாஸ் வீடு எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக உள்ள நிலையில், நிகழ்ச்சி நடைபெற உள்ள வீட்டை ஊடகங்களுக்கு விஜய் டிவி நிர்வாகம் சுற்றிக் காட்டியுள்ளது. பூந்தமல்லியைத் தாண்டி பெங்களூரு செல்லும் சாலையில் உள்ள EVP வளாகத்தில் இந்த பிக் பாஸ் வீடு அமைந்துள்ளது.
வீட்டின் நுழைவுப் பகுதியில் பசுமையான வெளிப்புறத் தோற்றத்துடன் நான்கு குஷன் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், அங்கு 10 ஜன்னல்கள் இடம்பெற்றுள்ளன.பிக் பாஸ் சீசன் 10 என்பதை நினைவூட்டும் வகையில் வீட்டின் பல்வேறு வேலைப்பாடுகளில் 10 என்ற எண்ணை இடம்பெறச் செய்துள்ளதாகவும், அதன் ஒரு பகுதியாகவே 10 ஜன்னல்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |