பிக்பாஸ் வெற்றிக்கு பின்பு ராஜுவின் முதல் காணொளி: பரிதாபமாக காணப்படுவதை நீங்களே பாருங்க
பிரபல ரிவியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் டைட்டிலை வென்றுள்ளார் ராஜு ஜெயமோகன்.
பிக்பாஸ் ஐந்தாவது சீசன் பிரபல ரிவியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்தது. நேற்றைய தினம் ஒளிப்பரப்பான இந்த நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலாவில் அனைவரும் எதிர்பார்த்தபடி ராஜு ஜெயமோகன் டைட்டிலை வென்றுள்ளார்.
ராஜுவின் வெற்றி ஒட்டுமொத்த ரசிகர்கள் போட்டியாளர்கள் மட்டுமின்றி அவரது குடும்பத்தினர் அதிலும் அவரது தாய் மிகவும் மகிழ்ந்ததுடன் ஆனந்தக் கண்ணீரே விட்டார்.
அதுமட்டுமின்றி மேடையில் ஏறிய பின்பு தனது மகன் வாங்கிய கோப்பையை அவரே கையில் வைத்துக்கொண்டு பெரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்திருந்தார்.
இந்நிலையில் பிக்பாஸ் வெற்றிக்கு பின்பு ராஜுவின் முதல் காணொளி ஒன்று வைரலாகி வருகின்றது. இதில் செந்தூரப்பூவே சீரியலில் நடிக்கும் குழந்தை நட்சத்திரத்திடம் சிக்கிக்கொண்ட ராஜு மிகவும் பரிதாபமாக காணப்படுகின்றார்.