Bigg Boss: சுற்றிவளைத்து கேள்வி எழுப்பிய ஆண்கள்... அருண் செய்தது என்ன?
பிக் பாஸ் நிகழ்ச்சியில் சக ஆண் போட்டியாளர்கள் அனைவரும் சேர்ந்து அருணை அடுக்கடுக்காக கேள்வி கேட்டுள்ள ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் 6ம் தேதி ஆரம்பமாகியுள்ளது. விஜய் சேதுபதி நடத்தும் இந்நிகழ்ச்சியில் தற்போது வரை பரபரப்பிற்கு பஞ்சம் வராமல் இருக்கின்றது.
நேற்றைய தினத்தில் சாச்சனா மற்றும் ஆனந்தி இருவரும் வெளியேறியுள்ள நிலையில், இந்த வாரம் 9 பேர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.
இன்றைய ப்ரொமோ காட்சியில் அருணிடம் சக ஆண் போட்டியாளர்கள் கேள்வி மேல் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதற்கு அருண் சற்று பதிலளிக்க தடுமாறினாலும், தன்னால் முடிந்தவரை நெத்தியடியாக பதில் அளித்துள்ளார்.
இதுவரை ஆண் போட்டியாளர்கள் சண்டையில்லாமல் இருந்த நிலையில், தற்போது அருணை மட்டும் அனைவரும் ஒதுக்கி வைக்கும் விதமாக விளையாடி வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |