பிக்பாஸ் வீட்டுக்குள் 3 வைல்டு கார்டு என்ரி: யார் அவர்கள்? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இன்று வைல்டு கார்டு எண்ட்ரியாக உள்ளே செல்ல உள்ள மூன்று போட்டியாளர்கள் யார் யார் என்கிற தகவல் தற்போது கசிந்துள்ளது.
பிக்பாஸ்
தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் மக்களின் மனதில் பெரிய அளவில் இடம் பிடித்து இருப்பது பிக்பாஸ் தான்.
இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கின்றனர். இதுவரைக்கும் இந்த சீசன் 6 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துவிட்டு இப்போது 7வது சீசன் வெற்றி நடைபோடுகின்றது.
கடந்த 6 பிக்பாஸ் சீசன்களை விட, பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி மிகவும் பரபரப்பாகவும், சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமலும் ஒளிபரப்பாகி வருகிறது. 7 சீசன்களையுமே உலக நாயகன் கமல்ஹாசன் தான் வெற்றிகரமாக தொகுத்து வழங்கி வருகின்றார்.
இந்த 7வது சீசன் தான். இந்நிகழ்ச்சியில் முதன்முறையாக பிக்பாஸ், சுமால்பாஸ் என இரண்டு வீடுகளுடன் நடத்தப்படுகிறது.
அதுமட்டுமின்றி இதுவரை எந்த சீசனிலும் இல்லாத வகையில் ஒரே நாளில் 5 வைல்டு கார்டு போட்டியாளர்களை பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பி போட்டியாளார்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார் பிக்பாஸ்.
அந்த வகையில் அர்ச்சனா, தினேஷ், கானா பாலா, அன்ன பாரதி, பிராவோ ஆகியோர் வைல்டு கார்டு போட்டியாளர்களாக சென்ற நிலையில், அதில் அன்ன பாரதி, கானா பாலா ஆகியோர் ஏற்கனவே எலிமினேட் ஆகிவிட்டனர்.
தற்போது 3 வைல்டு கார்டு போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சி உள்ளனர். இதுதவிர முதலில் இருந்து ஆடி வரும் 11 போட்டியாளர்களும் அவர்களுடன் காரசாரமாக மோதிக்கொள்கின்றனர்.
இவர்கள் பிரச்சினையே இன்னும் முடியாத நிலையில், தற்போது போட்டியாளர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் ஒரு குண்டை தூக்கி போட்டுள்ளார் பிக்பாஸ். அதன்படி மேலும் 3 வைல்டு கார்டு போட்டியாளர்கள் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல உள்ளதாக அறிவித்துள்ளார்.
இதில் திருப்பம் என்னவென்றால் அவர்கள் மூவரும் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் மூவருடன் போட்டியிடுவார்கள். அந்த போட்டியில் வைல்டு கார்டாக உள்ளே வரும் 3 பேர் ஜெயித்துவிட்டால் அவர்களுடன் போட்டியிட்ட 3 பேரும் வெளியே அனுப்பப்படுவார்களாம்.
தற்போது வைல்டு கார்டு எண்ட்ரியாக உள்ளே செல்ல உள்ள மூன்று போட்டியாளர்கள் யார் என்கிற தகவலும் கசிந்துள்ளது.
அதன் அடிப்படையில் இதற்கு முன்னர் எலிமினேட் ஆனவர்களில் இருந்து மூவரை தான் மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்ப உள்ளார்களாம். இதில் பிரதீப் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டதால் அவர் மீண்டும் வர வாய்ப்பில்லை.
அதேபோல் பவா செல்லதுரையும் பாதியிலேயே வெளியேறியதால் அவரும் வர வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. ஐஷூவும் மீண்டும் வர வாய்ப்பில்லையாம்.
எஞ்சியுள்ள அனன்யா ராவ், விஜய் வர்மா, வினுஷா தேவி, யுகேந்திரன், அன்ன பாரதி ஆகியோரில் மூவர் தான் இந்த வாரம் வைல்டு கார்டு எண்ட்ரியாக உள்ளே வர உள்ளார்களாம்.
இதில் அனன்யா ராவ், விஜய் வர்மா, வினுஷா ஆகியோர் உள்ளே வர அதிகளவில் வாய்ப்புகள் உள்ளதாக அனுமானிக்கப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |