பிக்பாஸ் குரலுக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா? இணையத்தை ஆக்கிரமிக்கும் புகைப்படம்
ரசிகர்களால் கொண்டாடப்படும் சின்னத்திரை நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிக்பாஸ் குரலுக்கு சொந்தகாரரின் புகைப்படம் சமூக வளைத்தளத்தில் வெளியாகி புதிய புயலை கிளப்பி வருகின்றது.
பிக்பாஸ்
தற்போது ரசிகர்களால் கொண்டாடப்படும் சின்னத்திரை நிகழ்ச்சிகளுள் பிக்பாஸ் முக்கிய இடம் பிடித்துள்ளது.
உலகளவில் பல்வேறு மொழிகளில் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சிக்கு தமிழிலும் அதிக வரவேற்பு இருக்கிறது. ரசிகர்களின் மனம் கவர்ந்த இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் கடந்த வாரம் தான் முடிவுக்கு வந்தது.
மற்ற போட்டியாளர்களை விட மக்களிடம் இருந்து அதிக வாக்குகளை பெற்ற விஜே அர்ச்சனா பிக்பாஸ் 7 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ஆனார். இது குறித்து சில விமர்சனங்கள் ஒரு பக்கம் இருந்தாலும் கூட ரசிகர்கள் அர்ச்சனாவின் வெற்றியை கொண்டாடி வருகிறார்கள்.
அனைவரையும் 100 நாட்கள் ஆட்டி படைப்பது ஒரே ஒரு குரல் தான். அந்த கணீர் குரலுக்கு சொந்தக்காரர் யார் என்பது பெரிதாக யாருக்கும் தெரியாது.
ஆனால் தற்போது அந்த குரல் யார் என்று தெரியவந்துள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தமிழில் முதல் சீசனில் இருந்து குரல் கொடுத்து வருபரின் பெயர் சதியிஷ் சாரதி சஷோ என தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது குறித்த புகைப்படம் மற்றும் வீடியோ இணையத்தில் காட்டு தீ போல் பரவி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |