Bigg Boss 10: சோற்றில் விஷம் வைப்பீர்களா? முனியம்மாவை வறுத்தெடுத்த விஜய்சேதுபதி
Vijay Sethupathi Roast Munniyamma: பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி இன்று முனியம்மாவை அன்சரை பேசியதை குறித்து கேள்வி எழுப்பி சரமாரியாக திட்டித் தீர்த்துள்ளார்.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த நாட்களில் டிக்கெட் டூ பினாலே டாஸ்க் நடைபெற்றது. தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி 75 நாட்களைக் கடந்து செல்லும் நிலையில், 10 போட்டியாளர்கள் மட்டும் இருக்கின்றனர்.
இந்த 10 போட்டியாளர்களில் வீட்டின் தலைவரான தன்யா, வினோத், அன்சர் இவர்களைத் தவிர மற்ற ஏழு பேர் நாமினேஷனில் இருந்து வருகின்றனர்.

கடந்த சில வாரங்களாக இரண்டு பேர் எலிமினேட் ஆகும் நிலையில் இந்த வாரம் இரண்டு போட்டியாளர்கள் வெளியேறுவார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இந்நிலையில் இன்றைய ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ள நிலையில் முனியம்மாவை வறுத்தெடுத்துள்ளார்.
முனியம்மா செய்த தவறு
கடந்த வாரம் முழுவதும் முனியம்மா மற்றவர்களிடம் சண்டை போட்டு வந்துள்ளார். அதாவது டிடிஎஃப் வாசனிடம் முதலில் சண்டை போட்டு வந்தார்.
இதனால் ரசிகர்கள் கடும் கோபத்தில் காணப்பட்ட நிலையில், அன்சரிடம் அவர் பேசியுள்ளது மீண்டும் கோபத்தினை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது அன்சர் முனியம்மா சாப்பாடு விஷயத்தில் நடந்து கொள்ளும் விதத்தினைக் கூறினார். இதில் முட்டை வாக்குவாதத்தில் பேசிக்கொண்டிருக்கையில் ஒரு கட்டத்தில் முனியம்மா கோபத்தில் சாப்பாடை விட்டு கை கழுவினார்.
ஆனால் சிறிது நேரம் கழித்து சாப்பிட்டுக் கொண்டிருக்கையில், அன்சரிடம் வந்து சாப்பாட்டை ஊட்டிவிடுவது போன்று வந்தார். அத்தருணத்தில் அன்சரும் வாய் திறந்த போது, உனக்கு சாப்பாடு ஊட்டுவதற்கு முன்பு விஷத்தை கலந்திருக்கனும் என்று வார்த்தையை விட்டார்.
இதனால் அன்சர் பயங்கரமாக கோபம் கொண்டு பேசியுள்ளார். இந்நிலையில் விஜய் சேதுபதி இன்று அதே தலைப்பினை எடுத்து முனியம்மாவை வறுத்தெடுத்துள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |