யார் இந்த அர்ச்சனா.. எதற்காக பிக்பாஸ் வந்துள்ளார்? இப்படி பல கேள்விகளுக்கு பதில் கொடுக்கும் பின்னணி!
பிக்பாஸ் வீட்டில் அழு மூஞ்சி என அசிங்கமாக பேசப்படும் அர்ச்சனாவின் கனவு தொடர்பான செய்திகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் 7
நாம் அனைவரும் பெரும் எதிர்பார்ப்புகளுடன் காத்திருந்த பிக்பாஸ் 7 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி பிரமாண்டமாக ஆரம்பமானது.
இந்த சீசனில் கூல் சுரேஷ், பவா, சரவண விக்ரம்,விசித்ரா, நிக்ஸன், ஐஷூ, விஜய் வர்மா, அனன்யா ராவ், யுகேந்திரன், பிரதீப், விஷ்ணு, பூர்ணிமா, மாயா, ஜோவிகா, மணி, ரவீனா, அக்ஷயா, வினுஷா ஆகிய 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
கடந்த ஆறு சீசன்களை வெற்றிக்கரமாக நிறைவு செய்த பிக்பாஸ் இந்த சீசனில் இரண்டு வீடு எனக் கூறி போட்டியாளர்களுக்கு டுவிஸ்ட் கொடுத்துள்ளது.
இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் வீட்டிற்கு வைல்ட் கார்ட் என்றியாக 5 போட்டியாளர்கள் வருகை தந்துள்ளார்கள்.
யார் இந்த அர்ச்சனா?
அந்த வகையில் வைல்ட் கார்ட் என்றியில் முக்கிய பிரபலங்களில் ஒருவராக பார்க்கப்படுவர் தான் அர்ச்சனா.
இவர் ஒரு சீரியல் நடிகை. ஆரம்ப காலங்களில் மீடியாத்துறையில் சாதிக்க வேண்டும் என நினைத்தவர் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். பின்னர் சீரியலிருந்து விலகி சினிமா பக்கம் செல்கிறார் என்ற செய்தி வெளியானது.
ஆனால் சினிமாவிற்குள் செல்லாமல் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளார். சின்ன வயதிலிருந்து ஒரு கட்டுக்கோப்பான குடும்பத்தில் வளர்ந்த அர்ச்சனா எப்படி பிக்பாஸ் வீட்டிற்குள் இருப்பார்? என்பதனை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
பெண்கள் தைரீயமாக இருக்க வேண்டும் என பேசுபவர்கள் உண்மையில் வீரர்கள் அல்ல என்பதற்கு அர்ச்சனா சிறந்த உதாரணமாக இருந்து வருகிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |