Bigg Boss: அடுத்த கம்ருதினாக மாறும் வினோத்... திவாகருக்கு கொடுக்கும் நெருக்கடி
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஏற்கனவே வெளியேறிய போட்டியாளர்கள் மீண்டும் வீட்டிற்குள் வந்து பல விடயங்களைக் கூறிவருகின்றனர்.
பிக் பாஸ்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு கம்ருதின், பாரு இவர்களின் வெளியேற்றம் இருந்துள்ளது. மேலும் சுபிக்ஷா வெளியேற்றம் கூட நியாயமில்லாத எவிக்ஷன் என்றும் பேசப்படுகின்றது.
இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து 90 நாட்களை கடந்து செல்வதால், வெளியே எவிக்ட்டாகி சென்ற போட்டியாளர்களை பிக்பாஸ் மீண்டும் வீட்டிற்குள் இறக்கியுள்ளார்.

அந்த வகையில் பிரவீன் ராஜ், பிரவீன் காந்தி, வியானா, திவாகர் வந்த நிலையில் தற்போது அப்சரா மற்றும் ரம்யா இருவரும் உள்ளே வந்துள்ளனர்.
இவர்களுடன் பிக்பாஸ் டாஸ்க் ஒன்றினைக் கொடுத்துள்ளார். இதில் தன்னைவிட தகுதியில்லாமல் வீட்டிற்குள் இருக்கும் நபரைக் குறித்து வெளியிலிருந்து மீண்டும் வந்த போட்டியாளர்கள் கூறி வருகின்றனர்.
மேலும் வினோத்தின் குணம் தற்போது மாறியுள்ளது. அடுத்த கம்ருதின் போன்று திவாகரிடம் வம்பிழுத்து தகாத வார்த்தையை பேசுவது சக போட்டியாளர்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது..
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |