Bigg Boss: பாரு, கம்ருதின் மைக்கை கழற்றி வைத்த தருணம்! தக்க பதிலடி கொடுத்த விஜய்சேதுபதி
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாரு கம்ருதின் இருவரும் மைக்கை கழற்றி வைத்து பேசியதற்கு விஜய்சேதுபதி சரியான பதிலடி கொடுத்துள்ளார்.
பிக்பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸில் பல சுவாரசியம் அரங்கேறியுள்ளது. மொத்தம் 24 போட்டியாளர்கள் உள்ளே சென்ற நிலையில், தற்போது 15 போட்டியாளர்கள் இருக்கின்றனர்.
இந்த வாரம் பார்வதி, கம்ருதின் இருவரும் செய்த தவறுக்காக பிக்பாஸ் அனைவருக்கும் தண்டனை கொடுத்துள்ளார். அதாவது வீட்டிலுள்ள பால், காபி, டீ, முட்டை இவற்றினை எடுத்துச் சென்றுவிட்டனர்.

தற்போது மைக்கை மறைத்து வைத்து பேசியதை விஜய் சேதுபதியும் கேட்க ஆரம்பித்துள்ளார். மைக் போடுவதற்கு பிடிக்காத உங்களுக்கு எதற்காக மைக்? கழற்றி வையுங்கள் என்று கூறியுள்ளார்.
உடனே பாரு பேசிய நிலையில், எதுவும் கேட்கவில்லை என்று உதாசினப்படுத்திவிட்டு விஜய் சேதுபதி கிளம்பியுள்ளார்.
மற்றொரு ப்ரொமோ காட்சியில் கம்ருதின், திவ்யாவிடம் சண்டையிட்டதை வீட்டு தலைவராக இருந்த அமித் பார்கவ் எதுவும் கேட்காமல் இருந்தது விஜய் சேதுபதியை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் விஜய் சேதுபதி நிறுத்தக்கூறியும், பேச்சை நிறுத்தாமல் பேசிய அமித்தை எச்சரிக்கவும் செய்துள்ளார்..
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |