டீ-க்காக கெஞ்சும் பிக் பாஸ் வீட்டினர்.... பழி தீர்க்க ஆரம்பித்த வைல்டு கார்டு போட்டியாளர்கள்
பிக்பாஸ் வீட்டில் பிரதீப்பை ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றிய விவகாரத்தில் மாயா மற்றும் பூர்ணிமாவை விசித்ரா மற்றும் அர்சனா காரசாரமாக எதிர்த்தனர் அதன் பின்னர் பிக்பாஸ் வீட்டில் வேட்டை ஆரம்பமாகியுள்ளது.
பிக்பாஸ்
தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் மக்களின் மனதில் பெரிய அளவில் இடம் பிடித்து இருப்பது பிக் பாஸ் தான். இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கின்றனர்.
இதுவரைக்கும் இந்த சீசன் 6 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துவிட்டு இப்போது 7வது சீசன் வெற்றி நடை போடுகின்றது. இந்நிகழ்ச்சியில் ஸ்மார்ட் ஆன போட்டியாளராக விளையாடி வந்தவர் பிரதீப் ஆண்டனி. பிக் பாஸ் வீட்டின் விதிமுறைகளை அறிந்து விளையாடிய திறமையான போட்டியாளர். அந்த அளவுக்கு விதிமுறைகளை முறையாக பின்பற்றி விளையாடி வந்தார்.
அவரை நாமினேட் செய்தாலும் வெளியேற வாய்ப்பில்லாததால், மாயா, பூர்ணிமா ஆகியோர் கேங்காக பேசிவைத்து அவர்மீது உரிமைக்குரல் மூலம் அடுக்கடுக்கான புகார்களை கொடுத்தனர்.
அதில் பிரதீப், இந்த வீட்டில் இருந்தால் தங்களுக்கு பாதுகாப்பு இலை என மாயா, பூர்ணிமா, ஜோவிகா, ரவீனா ஆகியோர் ஒன்றாக புகார் கொடுத்ததை அடுத்து அதிரடி ஆக்ஷனில் இறங்கிய கமல் பிரதீப்பை ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பினார்.
அவர் பிரதீப் தரப்பு நியாயத்தை பேச கூட வாய்ப்பளிக்காமல் அவரை வெளியே அனுப்பியது சர்ச்சையை ஏற்படுத்தியதோடு, சமூக வலைத்தளங்களில் பிரதான பேசுபொருளாக மாறியது.
இதனை தொடர்ந்து பிரதீப்பை வெளியில் அனுப்பிய விவகாரம் குறித்து பிக் பாஸ் வீட்டிலும் பரபரப்பான சூழல் நிலவுகின்றது. மாயா மற்றும் பூர்ணிமாவை விசித்ரா மற்றும் அர்சனா கடுமையாக எதிர்த்தனர் இதனால் கடுப்பான மாயா பிக் பாஸ் வீட்டில் விசித்ராவை பலிவாங்கும் முயற்சியை தனது ஸ்டைலில் ஆரம்பித்திருக்கின்றார். இதுகுறித்த புரோமோ காட்சிகள் தற்போது இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.
#Day36 #Promo2 of #BiggBossTamil
— Vijay Television (@vijaytelevision) November 6, 2023
Bigg Boss Tamil Season 7 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #KamalHaasan #Disneyplushotstartamil #RendulaOnnuPaakkalaam #BiggBossTamil #BBT #BBTamilSeason7 #பிக்பாஸ் #VijayTelevision #VijayTV pic.twitter.com/2ZQUbXQbZ3
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |