ரணகளமாகும் பிக் பாஸ் வீடு... விசித்ரா சரமாரியான பதில்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் மறைமுக பேச்சை அனைத்து போட்டியாளர்களிடமும் போட்டுக் கொடுத்ததால் வீடு ரணகளமாகியுள்ளது.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் கடந்த மாதம் 1ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது ஒரு மாதம் நிறைவடைந்துள்ளது.
இதில் இருந்து அனன்யா, பவா செல்லதுரை, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்ன பாரதி, மற்றும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு பிரதீப் என 7 பேர் வெளியேறியுள்ளனர்.
பிரதீப்பிற்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டது குறித்து அர்ச்சனா விசித்ரா இருவரும் சக போட்டியாளர்களிடம் சண்டைக்கு நிற்கின்றனர். இதனால் ரசிகர்களின் ஆதரவு விசித்ரா மற்றும் அர்ச்சனாவிற்கு அதிகம் இருந்து வருகின்றது.
இந்நிலையில் பிக் பாஸ் இன்று போட்டியாளர்கள் சில இடங்களில் கொடுத்த ஸ்டேட்மெண்டை வெளிச்சம் போட்டு காட்டி அதற்கு விளக்கம் கேட்டு வருகின்றார்.
தற்போது ஜோவிகா குறித்து அர்ச்சனா விசித்ரா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரதீப் வெளியேற்றத்திற்கு பின்பு பிக் பாஸ் வீடு கடும் சண்டையில் சென்று கொண்டிருக்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |