வருத்தப்படாதீங்க...கணவரை விவகாரத்து செய்த பிக்பாஸ் பிரபலம்! பேரதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்
பிக்பாஸ் பிரபலம் வைஷ்ணவி திடீரென விவாகரத்தை அறிவித்திருக்கும் தகவல் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றிருக்கும் நிகழ்ச்சியில் ஒன்று பிக்பாஸ்.
அதில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் பங்கு பெற்று மக்கள் மத்தியில் பிரபலமாகி இருந்தவர் ஆர்.ஜே. வைஷ்ணவி.
அவர் பதிவிட்டுள்ளதாவது, “ 6 வருடங்களாக ஒன்றாக இருந்த நானும், அஞ்சானும் பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம். நான் இன்னும் அவரை நேசிக்கிறேன். ஆனால், நாங்கள் இருவரும் உறவின் அழுத்தம் இல்லாமல் நாங்களாகவே இருக்க, நீண்ட ஆலோசனைக்கு பிறகு பிரிவதே சிறந்தது என முடிவு செய்துள்ளோம்.
எங்களிடம் நிறைய பொதுவான குணங்கள் இருந்தாலும், நாங்கள் நண்பர்களாக இருப்பதே சிறப்பு என்பதை கண்டுபிடிக்க இத்தனை ஆண்டுகள் எங்களுக்கு ஆகிவிட்டது. என்ன நடந்துவிட்டது என்று யூகிக்கும் அனைவருக்கும் எங்களுக்குள் எதுவும் மோசமாக நடக்கவில்லை என்பதை தெரியப்படுத்த விரும்புகிறோம்.
தயவு செய்து எங்களுக்காக வருந்தாதீர்கள்
தயவு செய்து எங்களுக்காக வருந்தாதீர்கள். ஏனென்றால், நாங்கள் பிரிந்ததற்கு வருந்தவில்லை.
அஞ்சானும், நானும் இன்னும் நண்பர்களாக இருக்கிறோம். பெரியவர்களாகிய நாங்கள் இனி தம்பதியாக இருக்க முடியாது என்ற முடிவை யோசித்து எடுத்தோம். அதுவே எங்களுக்கு சிறந்தது.
After 6+ years together, @a_flyguy and I have decided to part ways. I still love him just as much but after much deliberation we both have decided that it is best we both do what allows us to be ourselves without the pressure of a relationship pic.twitter.com/ihQMzft8P1
— Valia (@Vaishnavioffl) August 14, 2022
நண்பர்களாக இருப்பது எல்லாவற்றையும் விட சிறந்தது.”
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். வைஷ்ணவி தனது கணவரை பிரிந்ததற்கு அவரது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.