அல்டிமேட்டிற்கு அழைக்கப்பட்ட யாஷிகா... பரபரப்பான பதில் கொடுத்த காட்சி
நடிகை யாஷிகாவை பிக்பாஸ் அல்டிமேட்டிற்கு செல்கிறீர்களா என்ற கேள்விக்கு அவர் அளித்துள்ள பதில் காணொளி வைரலாகி வருகின்றது.
பஞ்சாப் மாடல் அழகியான இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று பிரபலமானதோடு, சில படங்களின் மூலமும் பிரபலமாகியுள்ளார்.
தனது கவர்ச்சியான நடிப்பினால் ரசிகர்களைக் கவர்ந்து வரும் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர்.
யாஷிகாவிற்கு ஏற்பட்ட விபத்து
பிக்பாஸிற்கு பின்பு படங்களில் நடித்து வந்த யாஷிகா தனது நண்பர்களுடன் மாமல்லபுரம் அருகே காரில் சென்று கொண்டிருந்த போது விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் யாஷிகாவின் உயிர்தோழி வள்ளி ஷெட்டி பவானி என்பவர் உயிரிழந்ததால், யாஷிகா மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் சிக்கிய யாஷிகாவிற்கு பல எலும்புகள் முறிந்த நிலையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது அதில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்துள்ளார் இருந்து மேலும், நீண்ட இடைவெளிக்கு பின்னர் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். சமீபத்தில் நிறைவடைந்த பிக் பாஸ் சீசன் 5வில் கூட சிறப்பு விருந்தினராக சென்று போட்டியாளர்களை உற்சாகப்படுத்தினார்.
Yashika's savage reply to "body exposing" question ???? pic.twitter.com/sJT0gSGT7B
— Anbu (@Mysteri13472103) March 7, 2022
பிக்பாஸ் அல்டிமேட்டில் வைல்டு கார்டு எண்ட்ரி
இப்படி ஒரு நிலையில் தற்போது ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்பு வந்ததாக கூறி உள்ளார் யாஷிகா. வாய்ப்பு வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தன் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் ரசிகர்கள் கேள்விக்கு பதில் அளித்தார்.
அப்போது பிக் பாஸ் அல்டிமேட்டில் வைல்ட் கார்டாக என்ட்ரி கொடுக்க திட்டம் இருக்கிறதா என்ற ரசிகரின் கேள்விக்கு பதில் அளித்த யாஷிகா ‘ஆம், என்னை பிக் அளித்த அல்டிமெட்டில் கலந்துகொள்ள அழைப்பு வந்தது. ஆனால், என்னால் பழையபடி டாஸ்க் பண்ண முடியாது. மேலும், நான் 18 வயசு இருக்கும் போது பிக் பாஸுக்கு போனேன். அந்த ஒரு கேப்பும் இருக்கு. நான் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. மேலும், இனியும் நான் எந்த லவ் ஸ்டோரியிலும் இருக்க விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.