பிக்பாஸ் அல்டிமேட்டில் இந்தவாரம் வெளியேறும் நபர் யார் தெரியுமா? லீக்கான தகவல்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரத்தில் இடைப்பட்ட நாளில் வனிதா வெளியேறியதை அடுத்து, இந்த வார இறுதியில் யார் வெளியேறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் 14 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், சுரேஷ், சுஜா வருணி, ஷாரிக், அபிநய் ஆகியோர் மக்களால் வெளியேற்றப்பட்ட நிலையில், வனிதா நேற்றைய தினத்தில் சில காரணங்களால் வெளியேறினார்.
தற்போது 9 பேர் விளையாடி வரும் நிலையில், சுருதி, அபிராமி, ஜூலி, நிரூப், அனிதா, சினேகன், தாடி பாலாஜி என 7 பேர் நாமினேஷனில் இருந்து வருகின்றனர். தாமரை தலைவராகவும், பாலாஜி இந்த வார ட்ரெண்டிங் பிளேயராகவும் இருப்பதால் நாமினேஷனில் இருந்து எஸ்கேப் ஆகியுள்ளனர்.
இந்த 7 பேரில் சினேகன் மற்றும் தாடி பாலாஜி இருவரும் டேஞ்சர் ஜோனில் உள்ளனர். ஏனென்றால் சினேகன் சுவாரஸ்யம் குறைந்த போட்டியாளராக ரசிகரின் பார்வையில் தெரிவதால் அவர் குறைந்த ஓட்டுக்களைப் பெற்று இந்த வாரம் வெளியேற அதிக வாய்ப்பிருக்கிறது.
அத்துடன் தாடி பாலாஜி விளையாட்டின் முழு ஈடுபாடு செலுத்தாமல், ஏனோதானோ என எல்லா விளையாட்டையும் விளையாடுவதால் அவரும் வெளியேற அதிக வாய்ப்பிருக்கிறது. ஆகையால் இவர்கள் இருவரும் யார் வெளியேற போகின்றார் என இந்த வார இறுதி நாளில் பொறுத்திருந்து பார்ப்போம்.