அல்டிமேட்டில் சிம்புவால் வெளியேற்றப்படும் நபர் யார் தெரியுமா? வெளியே கசிந்த உண்மை
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இந்த வாரம் சிம்புவால் வெளியேற்றப்படும் போட்டியாளர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் தாமரைச்செல்வி, ஜூலி, அபிராமி, சினேகன், அனிதா, தாடி பாலாஜி, சுருதி ஆகிய 7 பேர் இடம் பெற்றுள்ளனர். இதில் தாடி பாலாஜி இந்த வாரம் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற அதிக வாய்ப்பிருக்கிறது.
ஏனென்றால் இவர் பிக்பாஸ் கொடுக்கும் டாஸ்க்கை முழு ஈடுபாட்டுடனும் ஆர்வத்துடனும் செய்ய முன் வராததும், சுவாரஸ்யம் குறைந்தவராகவே மக்கள் மத்தியில் காணப்படுகின்றார்.
இதனால் மக்களிடமிருந்து குறைந்த வாக்குகளைப் பெற்று அவரே அடுத்து எலிமினேட் ஆக போகிறார். இவர் மட்டுமின்றி இவருடன், அபிராமியும் குறைந்த வாக்குகளே பெற்றுள்ளார்.
ஆகையால்ட இந்த நாமினேஷன் லிஸ்டில் இருக்கும் ஏழு பேருக்கும் இந்த வார இறுதியில் யாருக்கு எவ்வளவு ஓட்டுக்கள் கிடைக்கும் என்பதையும் யார் வெளியே போகிறார் என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.