வந்ததுமே கமல் ரசிகர்களிடம் கைதட்டல்களை அள்ளிய சிம்பு
பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு வந்ததுமே சிம்பு நேரடியாக மேடைக்கு வந்து பார்வையாளர்களை சந்திக்காமல், வீட்டிற்குள் ஆக்டிவிட்டி ஏரியாவிற்கு போட்டியாளர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக வரச் சொல்லி பேசினார்.
போட்டியாளர்களை சந்தித்த பிறகு பிக்பாஸ் அல்டிமேட் மேடைக்கு வந்த சிம்புவை ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
ஆனால் வந்ததுமே கமலை பற்றி பேசினார் சிம்பு. பிக்பாஸ் மியூசிக்கை கேட்டதுமே எல்லோருக்கும் நினைவில் வரும் ஒரே நபர் கமல் சார் தான்.

கமல் சாருக்கு பதில் நான் இங்கு வரவில்லை. தவிர்க்க முடியாத காரணங்களால் அவரால் இந்த நிகழ்ச்சியில் தொடர முடியாமல் போனது. அவர் மீது கொண்டு மதிப்பு காரணமாகவும், எனக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி மிகவும் பிடிக்கும் என்பதால் தான் இதற்கு வந்தேன் என்றார்.
வந்ததுமே கமல் பற்றி சிம்பு பேசியது அனைவரையும் கவர்ந்தது. தொடர்ந்து கமல் பாணியிலேயே ரசிகர்களின் கேள்விகளுக்கு சிம்பு பதிலளித்தார்.
செம ஜாலியாக அவர் அளித்த பதில்களை சிம்பு ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் வேற லெவலில் கொண்டாடி வருகின்றனர். பிக்பாஸ் அல்டிமேட்டில் வந்ததற்காக சிம்புவிற்கு ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

