செம்ம ட்விஸ்ட்..இறுதி நேரத்தில் காப்பாற்றப்பட்ட சுருதி! அதிரடியாக வெளியேறிய அனிதா
பிக் பாஸ் அல்டிமேட்டில் இருந்து அனிதா வெளியேற்றப்படுவதாக சிம்பு அறிவித்து ட்விஸ்ட் கொடுத்துள்ளார்.
இந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனின் அனிதா, சுருதி, நிரூப், தாமரை, ஜூலி,சதீஷ் ஆகிய 6 பேர் நாமினேட் ஆகி இருந்தனர்.
இதில் ஆச்சரியப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் சமூக வலைதளத்தில் பல ஹேட்டர்ஸ்களை சம்பாதித்த ஜூலி இந்த சீசனில் நல்ல பெயரை எடுத்து வருவதால் அவர் இந்த வாரம் பல வலைதளத்தில் நடத்தட்ட வாக்கெடுப்பில் முதல் இடத்தில் இருந்து வருகிறார்.

சிலம்பரசன் அதிரடி அறிவிப்பு
ஜூலியை தொடர்ந்து தொடர்ந்து தாமரை மற்றும் நிரூப் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தில் இருந்து வந்தனர்.
எனவேய, சதீஷ், அனிதா, சுருதி ஆகிய மூவரில் யாரவது வெளியேறுவர் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இதில் சுருதி வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த வாரம் அனிதா வெளியேறுவதாக சிலம்பரசன் அறிவித்துள்ளார்.



அனிதாவை அதிரடியாக வெளியேற்றிய சிம்பு