பிக்பாஸ் அல்டிமேட்.. ஓவியா கலந்துகொள்ளாதது ஏன்? பிக்பாஸ் வைத்த சஸ்பென்ஸ்;
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியானது ஜனவரி 30-ம் தேதி தொடங்கு இருக்கிறது. ஓடிடியில் 24 மணிநேரமும் ஒளிப்பரப்பாகும் இந்நிகழ்ச்சியில், இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் கலந்துகொள்கின்றனர்.
கடந்த ஒரு வாரமாக போட்டியாளர்கள் பற்றிய விபரங்களை சோஷியல் மீடியாவில், ஹாட்ஸ்டார் வெளியிட்டு வந்தது. இதில் 14 போட்டியாளர்கள் பங்கேற்க போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்நிகழ்ச்சியில் ஓவியா கலந்துகொள்வார் என எதிர்ப்பார்க்கட்ட நிலையில் அவர் கலந்துகொள்ளவில்லையாம். முதலில் ஓவியாவிற்கு லேசான காய்ச்சல், இருமல் போன்ற பிரச்சனைகள் இருப்பதால் அவர் பங்கேற்கவில்லை என்றார்கள்.
அதன் பிறகு துவக்க விழா ஷுட்டிங்கில் ஓவியா கலந்து கொண்டார். அதனால் அவர் பிக்பாஸ் அல்டிமேட் போட்டியாளர்களில் ஒருவராக இடம்பெற போகிறார் என சொல்லப்பட்டது.
ஆனால், தற்போது உடல்நிலை குறைபாடுகளால் தான் ஓவியா பிக்பாஸ் அல்டிமேட்டில் பங்கேற்கவில்லை எனக்கூறப்படுகிறது.
இதனால் பிக்பாஸ் ஓவியாவிற்கு பதில் மற்றொரு பிரபலமான போட்டியாளரை களமிறக்க பிக்பாஸ் அல்டிமேட் டீம் முயற்சி செய்து வருகிறதாம்.