வனிதாவால் எவிக்ஷனிலிருந்து தப்பித்த போட்டியாளர்! பிக்பாஸின் திடீர் முடிவு
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் வனிதா வெளியேறிய நிலையில் இந்த வாரம் எவிக்ஷன் இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் 14 போட்டியாளர்கள் உள்ளே சென்ற நிலையில் இதுவரை ஐந்து பேர் வெளியேறியுள்ளனர். மீதம் 9 பேரில் 7 பேர் இந்த வாரம் நாமினேஷனில் காணப்பட்டனர்.
கடந்த வாரம் கமல்ஹாசன் குறித்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்து தனிப்பட்ட காரணத்தினால் வெளியேறினார். இந்நிலையில் இந்நிகழ்ச்சியினை தொகுத்து வழங்க நடிகர் சிம்பு களமிறங்கியுள்ளார்.
மேலும் இந்த வாரத்தில் வைல்டு கார்டு எண்ட்ரியாக சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் கலக்கப்போவது யாரு சதீஷ் உள்ளே வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வாரம் தாடி பாலாஜி வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வனிதா தானாவே வெளியேறியுள்ளதால், எவிக்ஷன் இல்லை என்று பிக்பாஸ் அறிவித்துள்ளதாம். இதனால் தாடி பாலாஜி இந்த வாரம் காப்பாற்றப்பட்டார். அடுத்த வாரம் தாடி பாலாஜி இருப்பாரா? வேற யாராவது வெளியே போறாங்களா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.