டாஸ்கினால் ஏற்பட்ட மோதல்! தாமரை பாலா இடையே அரங்கேறிய சண்டை
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இன்று கொடுக்கப்பட்டுள்ள புதிய டாஸ்கினால் போட்டியாளர்கள் சரமாரியாக அடித்துக்கொண்ட ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் அல்டிமேட்
டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் 24 மணிநேரமும் ஒளிபரப்பாகம் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் 14 போட்டியாளர்கள் முதலில் கலந்து கொண்டனர்.
பின்பு வைல்டு கார்டு எண்ட்ரியாக சதீஷ், ரம்யா இருவரும் உள்ளே சென்றுள்ளார். சுரேஷ் தாத்தா இரண்டாவதாக உள்ளே சென்றும் உடல்நிலை சரியில்லாததால் வெளியேறியுள்ளார். தற்போது எட்டு போட்டியாளர்கள் உள்ளே விளையாடி வருகின்றனர்.
முந்திரி சாப்பிட்டால் பக்கவிளைவு ஏற்படுமா? பலரும் அறியாத பகீர் உண்மை
அடித்துக்கொள்ளும் பாலா தாமரை
இந்த வாரத்தில் கொடுக்கப்பட்டு வரும் டாஸ்க் அனைத்தும் ஒற்றுமையாகவும், உறவுகளாகவும் இருக்கும் போட்டியாளர்களை பிரிக்க பிக்பாஸ் திட்டமிட்டுள்ளதாகவே பார்வையாளர்களுக்கு தெரிகின்றது.
சடுகுடு வண்டி, நீதிமன்றம் என கொடுக்கப்பட்ட டாஸ்கில் பாலா தாமரை இடையே மனஸ்தாபம் ஏற்பட்டது. தற்போது இன்றும் கொடி டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த டாஸ்கில் பாலா தாமரையை கீழே பயங்கரமாக தள்ளிவிடுவதும், அவரிடம் வாக்குவாதம் செய்வதுமாக காட்டப்பட்டுள்ளது.