இரண்டாம் திருமணத்திற்கு பின்னும் தாலியை கழட்டிய தாமரை... வெளிவந்த உண்மை! இப்படி ஒரு சோகமா?
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி இருந்த பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் முகம் தெரியாத நபராக அறிமுகமாகி தற்போது மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் தாமரை.
இவர் நாடகக் கலைஞர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.
இவர் ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு குழந்தைக்கு தகப்பனான ஒருவரை திருமணம் செய்துள்ளார். அவருடன் ஒரு மகனையும் பெற்றுள்ளார் தாமரை. பின் அந்த வாழ்க்கை பிரச்னையில் முடியவே பின் வேறு ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

தற்போதும் இவர் தனது பிள்ளைகளுக்காக தான் நாடகத்தில் நடித்து வருகிறார். இதன் மூலம் தான் தாமரைக்கு பிக் பாஸ் வீட்டில் நுழையும் வாய்ப்பு கிடைத்தது.
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்னர் தற்போது அல்டிமேட்டில் சிறப்பாக விளையாடி வருகிறார்.
இவர் அனிதா, ஜூலி இவர்களுடன் அதிகநேரம் இருக்கிறார். அந்த வகையில் ஜூலி தாமரையிடம் ஏன் தாலி அணியவில்லை? என்று கேட்டிருக்கிறார்.
இதற்கு விளக்கம் கொடுத்து தாமரை கூறியிருப்பது, நான் வெளியில் சென்றவுடன் தான் தாலி வாங்கி அணிய வேண்டும். நாங்கள் திருமணம் செய்யும் போது கவரிங் தாலி வாங்கி கல்யாணம் செய்து கொண்டோம். கவரிங் எனக்கு செட் ஆகவில்லை. அதனால் தான் அதை எடுத்து வைத்து விட்டேன்.
மேலும், வெளியில் சென்ற பிறகு தான் தாலி வாங்கி போட்டுக் கொள்ள வேண்டும் என்று தாமரை கூறியிருக்கிறார்.
இப்படி தாமரை உணர்ச்சிபூர்வமான பேசியிருப்பது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.